வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு!படங்கள் இணைப்பு

வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை பௌர்ணமி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறை தொகுதி செயலாளரும் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோ.சுகிர்தன் அவர்கள், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் எங்களுடைய கட்சியும் நானும் வலி வடக்கின் மீள்குடியேற்றத்திற்கு பல தரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

 

நீங்களும் எங்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாலயம் அபிவிருத்தி செய்வதற்காக பாராளுமன்ற கௌரவ உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களின் விசேட நிதியில் வயாவிளான் வட்டாரத்தின் பிரதிநிதியான யோகராசாவின் பங்கீட்டிலும் அவருடைய மற்றும் ஆலய பரிபால சபையின் கோரிக்கைக்கு அமைவாக, முதல் கட்டமாக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து தருகிறேன் என உறுதி மொழியாக உரையாற்றினார்.