வயாவிளான் வடமூலை பாடசாலைக்கு 50000/- இலங்கை ரூபா நிதி உதவி வழங்கிய வயாவிளான் இணையம்!

வயாவிளான் வடமூலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு 50000/- இலங்கை ரூபா நிதி உதவி வழங்கிய வயாவிளான் இணையம்!


வயாவிளான் வடமூலை றோமன் கத்தோலிக்க தழிழ் கலவன் பாடசாலையின் செய்திகள் மற்றும் தகவல்களை அழியாது ஆதரமாக சேமித்து வைப்பதற்காக, வயாவிளான் இணைய நிர்வாகிகள் கல்வி கற்ற கல்வித்தாய்க்கு, பாடசாலையின் இலச்சனை(design) மீள் வடிவமைப்பு மற்றும் உத்தியோகப்பூர்வமான பாடசாலைக்கான இணையத்தள(Domain)உருவாக்கம் மற்றும் logo மீள் வடிவமைப்புக்கான தொழிநுட்ப செலவுகளுக்கு நிதியுதவியாக, 50,000.00(Lkr) இலங்கை ரூபாவை வழங்கிய, எமது வடமூலை றோமன் கத்தோலிக்க பாடசாலையின் பழைய மாணவர்களின் இணையமான வயாவிளான் இணைய நிர்வாகிகளுக்கு எமது பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.
நாங்கள் அறிவு எனும் கல்விப்பால் குடித்த எமது கல்வித்தாயை உயர்த்த வேண்டி கடமை, அங்கே அறிவுப்பால் அருந்திய பழைய மாணவர்களாகிய எங்களின் கைகளிலே தான் தங்கியுள்ளது.