கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே!
அதனால் தானோ காலன் உனை இளவயதில்
கவர்ந்து கொண்டான் கால் வழியில்!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
ஊரவர் உறவுகள் நன்பர்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய் இலட்சியசீலனே …!!
நீள் துயில் கொள்பவனே
நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில்!
நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய்
எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்!
ஆண்டவன் சன்னிதானத்தில் ஆத்மா நிரந்தரமாக சாந்திகொள்ள இறைவனை வேண்டி நிற்கின்றோம்