வயாவிளான் மத்திய கல்லூரியின் மதில் கட்டுமானங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது!

இன்று (24/10/2020) எமது தாய்ச் சங்க செயலலாளர் திரு.தேவகுமார் அவர்கள் முன் மதில் கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்ய சென்றிருந்த பொழுது, வேலைகள் திறம்பட நடைபெறுவதையும், வேகமாக முன்னேற்றமடைவதையும் அவதானித்ததாக அறியத்தருகின்றார்.

அனைத்து வயவன்களுக்கும் வணக்கம் 🙏
அன்புடையீர்,
நேற்றைய தினம் பொருளாளர் திரு.கணேசானந்தன் அவர்கள் தெரிவித்ததைப்போல், கட்டுமான வேலைகள் தரமானதாக உள்ளதாக திரு.தேவகுமார் அவர்களும் உறுதிப்படுத்துகின்றார் என்பதையும் இத்தால் அறியத்தருகின்றோம்.
“ஓங்குக வயவன் புகழ்”
“செம்மை நெறி நில்”
இங்கனம்
தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.

news source:

தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.