வயாவிளான் மத்திய கல்லூரி அதிபர் அமரர் ஆ. சி. நடராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டப புனரமைப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது!

அமரர் ஆ. சி. நடராஜா மண்டப புனரமைப்பின் பிரதான பணியான உட்புற நிலைத்தாள் மட்டப்பலகை பொருத்தும் பணி முற்றாக நிறைவுற்றது. பறவைகள், சிறு பிராணிகள் உள்நுழைவதைத் தடுக்கும் பொருட்டு கம்பிவலை பொருத்தும் வேலைகளும் முடிவடைந்தன. அடுத்து வெளிப்புற நிலைத்தாள் மட்டப்பலகை பொருத்தும் பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

அதன் பின் மின்சார தொடுப்புக்கள், மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியன பொருத்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என கட்டட ஒப்பந்ததாரர் திரு.உதயகுமார் இன்று (03/11/2020) அறியத்தருக்கின்றார்.
அவர் மேலும் கூறுகையில், உடபுறச் சுவரின் சேதமடைந்த பகுதிகளை மட்டப்படுத்தி வெண்களி பூசப்பட்டுள்ளது எனவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் பழுதுகள் சீரமைக்கப்பட்டவுடன், உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களுக்கான வர்ணம் பூசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், நாட்டின் அசாதாரண சுகாதாரச் சூழல் காரணமாக பொருளாதார மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் ஏற்பட்டு கட்டட பொருட்கள் வாங்குவதில் சிரமங்கள் ஏற்படாத பட்சத்தில், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வேலைகள் முடிந்து மண்டபம் கல்லூரி நிவாகத்திடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“செம்மை நெறி நில்”
இங்கனம்
தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.
news source:
https://www.facebook.com/globalvayavilan.ccoldstudents.7/posts/167776318343530