தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் அமைந்த பாடசாலை மதில் கட்டுமானம்!

அன்புடையீர், இன்று (13/12/2020) காலை எமது கல்லூரி முன்பக்க மதில் கட்டுமானத் தரப்பரிசீலனை இரு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது. காலை 8:30 மணியளவில் ஆரம்பித்த இத் தரப்பரிசீலனை 11:15 மணியளவில் நிறைவுற்றது.

தரமாகவும், உறுதியாகவும், திணைக்கள விதிகளுக்கமையவும் மதிலின் கட்டமைப்பு உள்ளதாக இவ் இரு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.
தரப்பரிசீலனை அறிக்கை பொறியியலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு, பிரதிகள் உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என பொறியியலாளர் திரு.வதனகுமார் அவர்கள் அறியத்தருகின்றார்.

 

நன்றி.
“செம்மை நெறி நில்”
இங்கனம்
தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.