வயாவிளான் சென்ஜேம்ஸ் பகுதியைசேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் ரூபா 150,000.00 பெறுமதியான ( 20’ x 15’) கோழிக் கூடும், முதற் கட்டமாக 19 ஊர்க் கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வுதவித் திட்டத்தை பெற்றுவழங்கிய எமது ஊரின் மைந்தன் ஆசிரியர்.ஜேம்ஸ் சிம்சன் அவர்களை நன்றியுடன் பாராட்டுகின்றோம். இக்கொரோனா காலத்திலும் இத்திட்டம் முழுமைபெற ஆசிரியர் ஜேம்ஸ் சிம்சன் அவர்களுடன் முன்நின்று உதவிபுரிந்த ஊர் நண்பர்களுக்கும், அவருடைய சக ஆசிரியநண்பர்களுக்கும் எமது இதயத்தால் நன்றிகள் உரித்தாகுக.