வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்சின் உபதலைவர் திரு.ஶ்ரீதரன் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 60 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்கினார்!

வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சின் உபதலைவர் திரு.ஶ்ரீதரன் பசுபதி அவர்கள் தன்னுடைய 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 60 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்கினார். தனது அறுபதாவது அகவை நிறைவை பல்வேறு அறப்பணிகளைச் செய்வதன் மூலம் கொண்டாடி வரும் திரு.ஶ்ரீதரன் பசுபதி அவர்கள் இயல்பாகவே மக்கள் அறப்பணி ஆற்றி வருபவர். பிரான்ஸ் வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் நீண்டகால நிர்வாக உறுப்பினராகவும் சமூக நலப் பணியாளராகவும் உள்ள திரு.ஶ்ரீதரன் பசுபதி அவர்களின் இம்மாந்தநேச உதவிகள் மீளெழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டன. அர்த்தம் பொதிந்த பிறப்பை அறப்பணி மூலம் கொண்டாடும் அகவை அறுபதை எட்டிய திரு.ஶ்ரீதரன் பசுபதி அவர்கள் நீண்டகாலம் நலம் வாழ வாழ்த்துகின்றோம்.