திரு செல்வர் அருள்பிரகாசம்

யாழ் வயாவிளானைச் சொந்த இடமாகக் கொண்ட, வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியரும், பலாலி ஆசியர் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், வவுனியா தமிழ் மகாவித்தியாலய முன்னாள் ஆங்கில பிரிவு பொறுப்பாசிரியருமான மதிப்பிற்குரிய செல்வர் அருள்பிரகாசம் அவர்கள் இன்று 04-03-2022 அன்று மாலை 5.00 மணியளவில் யாழ் உரும்பிராய் இல்லத்தில் 83 வயதில் அமரத்துவம் அடைந்தார்.

அவருக்கு எமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு உறவுகளுடன் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.