வயவையின் எமது உறவுகளுக்கு 30000/- உதவி வழங்கிய வயாவிளான் இணையம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டகப்புல மக்களில் ஒரு தொகுதியினருக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா Rs 10,000 வீதம் 54 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா 54 குடும்பங்களுக்கு தலா ரூபா10,000 வீதம் வழங்கப்பட்ட து . இந்த திட்டத்துக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தலா ரூபா 60,000 வீதம்(Rs 300,000) கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளிலிருந்து வழங்கினர்.மற்றும் ஒருஅன்புறவு தமது தாயாரின் நினைவாக ரூபா 60,000 வழங்கினார், எமது அயற்பங்கைச் சேர்ந்த ஒரு உறவு ரூபா 50,000 வழங்கினார்,முருகதாஸ் குடும்பத்தினர் ரூபா 50,000 வழங்கினர்.
இவர்களுடன் ஒட்டகப்புல மக்கள் ஆசிரியரின் ரூபா 50,000 உதவி மற்றும் வயாவிளான் இணையத்தின் ரூபா 30,000 உதவி மொத்தமாக ரூபா 540,000 ஊர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.