வயவை மண்ணின் மகள் செல்வி மேரி வினுஷா எமில் (லை) பாராட்டி வாழ்த்துகின்றோம்!

பாராட்டி வாழ்த்துகின்றோம் செல்வி .மேரி வினுஷா எமில்

அண்மையில் வடக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்திய மாகாண மட்ட பாடசாலைகள் தடகள போட்டியில், எமது மண்ணின் புதல்வி மேரி வினுஷா எமில் 800 மீற்றர்  1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இரண்டிலும் முதலாம் இடத்தை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த மகத்தான சாதனை மூலம் யாழ் மாவட்டத்துக்கும், வட மாகாணத்துக்கும் அத்தோடு நின்றுவிடாது,  வயாவிளான் ஒட்டகப்புலம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

இவர் எமில் – செல்வம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியாவார். இவர் மென்மேலும் கல்வியிலும் விளையாட்டிலும் பல சாதனைகள் படைக்க வேண்டுமென வயாவிளான் இணையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.