கடல் உணவுகளின் சுவை கலந்து மயிலிட்டியின் வீரவரலாற்றையும் எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்!

இந்து சமுத்திரத்து நடுவே  நீலக் கடலலைகள் நீந்தி வந்து தாலாட்டிச் செல்லும் இலங்கை நாட்டின் வரைபடத்தில் சிரசம் போலத் தென்படுவது யாழ்ப்பாணம் ஆகும். அழகிய மாங்கனித்தீவில் கல்வியறிவும் உயர்ஞானமும் கொண்டவர்கள் செறிந்து வாழ்த்ததாலும் முழுத்தீவின் தலைவிதியும் யாழ்ப்பாணத்தால் தீர்மானிக்கப்பட்டது.யாழ்ப்பாணத் தீபகற்பத்தை மானிடவியலாளர்களும் சிரசமாகவே காண்கிறார்கள். அந்தச் சிரசத்தின் சிரசத்தில் அமைந்துள்ள ஊர்களில் வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை போலவே மயிலிட்டியும் தலையாயது ஆகும். பிரித்தானியர்களும் வீரமயிலிட்டியர் தொடர்பாக தமது பொத்தகங்களில் எழுதியே வைத்துள்ளனர். “எமது காலத்திலும் எமக்கு முன்னர் இலங்கை மக்களின் நிர்வாகப் பீடத்தில் இருந்தவர்களுக்கும் அதிகம் தலைவலி கொடுத்தவர்கள் மயிலிட்டியின் மறவர்கள்”

“அவர்கள் தற்காப்புக் கலையிலும்(Martial Arts) மேன்மையுற்று பிரபலமடைந்து விளங்கினர் (The Martial Arts  of Maravar were popular among the Thuraiyar of Myliddy)before their youth were introduced to modern methods of training in the last decade( i.e.,1980s) அண்மையில் பிரிதானியாவின் பழம்பெரும் நூலகம் ஒன்றுக்குச் சென்ற நண்பர் சொன்ன விடையமே இது ஆகும்.முன்னொரு காலத்தில், 01)வீரமாணிக்கதேவன் 02)பெரிய நாட்டுத்தேவன் 03)நரசிங்கதேவன் என்ற வீரர்கள் வாழ்ந்து காவியம் படைத்த ஊரென வியந்துரைக்கப்படுவது மயிலிட்டி! அழகிய மயிலிட்டியின் அலகுகளாக அல்லது குறிச்சிகளாக “ஆதிமயிலிட்டி”, வீரமணிக்கதேவன்துறை போன்றன உள்ளன. வீரமணிக்கதேவன்துறை இன்றும் வீர மாணிக்கனின் வீரத்தை இயம்பி நிற்கிறது. தமிழர் சேனையின் முதலாவது இராணுவத் தளபதி லெப்.சீலன் அவர்களுடன் யாழ்/மீசாலையில் காவியமான ஆம் லெப் ஆனந்தன் அவதரித்த ஊரும் மயிலிட்டியேதான்!! “சுறா மீன்கள்” அதிகம் அதிகம் பிடிக்கப்பட்டு மாங்கனித்தீவின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைப்பதால் மயிலிட்டி என்றவுடன் பலருக்கு சுறா மீன்களே மனதில் நீச்சலடிக்கும். சுறாமீன் வறை என் மூக்கில் வியர்க்க என் அம்மா சொன்ன கதைகளும் நினைவில் மலர்கிறது. “மரியம்மா ஆச்சி மயிலிட்டியிலிருந்து கடகத்திலிட்டு தலையில் சுமந்து வரும் சுறாவின் அருஞ்சுவை” குறித்து நன்றியும் சொல்வார். துவிச்சக்கர வண்டிகளில் பலாலியிலிருந்து துடிதுடிக்க மீன் எங்கள் ஊருக்கு வருவதுதான் என் நினைவகத்தில் உள்ளது. இன்று உந்துருளிகளில் மீன் சந்தைகளுக்கு வரும் காலமும் வந்துவிட்டது.

“விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலங்களில் கடற்புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்பு பாதுகாப்புத் தளமாக பல விதங்களிலும் விளங்கியது மயிலிட்டி.”என்ற சேதிதனையும் ஏட்டறிவும் பட்டறிவும் மிகு பெட்டமாக எம் மத்தியில் திகழும் முத்தான மூத்தவர் ஒருவர் அண்மையில் பதிவு செய்திருந்தார். எனவே சுறாமீன்களின் சுவை கலந்து மயிலிட்டியின் வீரவரலாறையும் தம் அடுத்த தலைமுறைக்குச் சொல்வோம் வாரீர்! தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் பின் மயிலிட்டி அண்மையில் விடுவிக்கப்படடமை அவ்வூர் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

வீரமயிலிட்டியர்க்கு வயவர்களின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். அதே போல மயிலிட்டியை அண்டியுள்ள கிராமங்களாகிய பலாலி, கட்டுவன், குரும்பசிட்டி, வளலாய், வயாவிளான் கிராமங்களும் முற்று முழுதாக விடுவிக்கப்பட வேண்டும்.

News source: மீள் பதிவு