உதவும் கரங்கள் அமைப்பு அவுஸ்ரேலியாவின் வருடாந்த ஒன்று கூடல் 17-12-2023 அன்று இனிதே நடந்தேறியது!

மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவில் உதவும் கரங்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் பலரின் ஆதரவுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 130 திட்டங்களுக்கு மேல் இலங்கையின் பல மாகாணங்களிலும் செய்ததுடன்,ஏறத்தாள கடந்த ஐந்து வருடத்தில் 85 லச்சங்கள் பெறுமதியான தொகையில் பல திட்டங்களை செய்து இன்றும் சிறப்பாக பயணித்து செல்கின்றது.

உதவும் கரங்கள் அமைப்புடன் தொடர்ந்தும் கைகோர்த்து பயணிக்கும் அனைவருக்கும் அமைப்பின் நிர்வாகத்தின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்